அரசு வழங்கிய உணவை வாங்க சென்ற நபர்.. பரிதாப பலி..!
சென்னை திருவொற்றியூர் சண்முகாபுரத்தில் அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டது. சத்யநாராயணன் என்பவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர்.
நான்கு நாட்களாக புயல், வெள்ளம் காரணமாக வேலை இன்றி வீட்டில் முடங்கி கிடந்த அவர் நேற்று இரவு அரசு சார்பில் உணவு வழங்குகிறார்கள் என்று தகவலை தெரிந்து கொண்டு உணவு வாங்க சென்றார்.
சத்யநாராயணன் அந்த பகுதியில் எதிர்பாராமல் தேங்கி இருந்த நிலையில் பள்ளம் என்று தெரியாமல் அதில் விழுந்து உயிரை இழந்துள்ளார். இன்று காலை சத்தியமூர்த்தி பகுதியில் வெள்ளம் வடிய தொடங்கியது.
அப்போது சத்யநாராயணன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






