--- --:--:-- --

அண்ணாமலை நிவாரண பொருட்கள் வழங்கும்போது தள்ளுமுள்ளு..!

1

சென்னை அடுத்த ஆவடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்கள் வழங்கிய பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கனமழை காரணமாக ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்களை வழங்கினார். அப்பொழுது தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் நிவாரண பொருட்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

 

இதனால் விரக்தியடைந்த அண்ணாமலை சிலருக்கு மட்டும் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் பாஜக சார்பில் வழங்கப்பட வேண்டிய நிவாரண பொருட்களை பொதுமக்கள் முன்பு எடுத்துக் கொண்டு சென்றார். இதனால் பாஜகவினருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பொழுது பாஜக நிர்வாகி தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon