உயிரிழப்புகளை தடுக்கவே சில இடங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை : முதல்வர்
வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உயிரிழப்புகளை தடுக்கவும் தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர், திருவிக நகர் மற்றும் எலும்பூர் தொகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில் மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள், முதல் கடை நிலை பணியாளர்கள் வரை மக்களை பாதுகாக்க களத்தில் ஓய்வின்றி உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் நிலைமை சீரழியும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





