--- --:--:-- --

அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் பியூஷ் மனுஷ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!

1

மிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க தடைக்கோரி கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

 

அதில், தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் வெளியான அந்த வீடியோவால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணக்கு வந்தது.

 

அப்போது, இது தொடர்பாக பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அண்ணாமலையின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, பியூஷ் மனுஷ்க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon