--- --:--:-- --

பட்டா பெயர் மாற்றத்திற்கு ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்..!

8

ஞ்சையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற வருவாய் துறை சர்வேயர் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் தனது நிலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக வருவாய் துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது சர்வேயர் ரமேஷ் என்பவர் பட்டா பெயர் மாற்றத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க வந்த வைத்தியநாதன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவலரிடம் புகார் அளித்துள்ளார்.

 

லஞ்ச ஒழிப்பு காவலர்களின் அறிவுறுத்தலின் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை இடைத்தரகர மகேந்திரன் மூலம் ரமேஷிடம் வைத்தியநாதன் கொடுத்துள்ளார். அப்பொழுது அங்கு பதுங்கி இருந்து லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சர்வேயர் ரமேஷ் மற்றும் இடைத்தரகர் மகேந்திரன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

 

Right Menu Icon