கலைஞர் மகளிர் உரிமைத்தொகை..மேல்முறையீடு செய்தவர்களின் நிலை என்ன..?
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.12,000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான செப்டெம்பர் 15ம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வரும் டிசம்பர் மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர்.
இதில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அவை ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக மேலும்ம் சிலர் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனராம். தகுதியான நபர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களுக்கு அடுத்த மாதம் முதலே பணம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பணம் வழங்கும் தேதியான் 15ம் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.






