--- --:--:-- --

கருங்காலி மாலையை ஐ.பெரியசாமிக்கு அன்பாக பரிசளித்த கே.என்.நேரு..!

6

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

 

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக இளைஞரணி குறித்தும், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் வெகுவாக புகழ்ந்தார். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாநாடாக, சேலம் மாநாடு இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

இந்த கூட்டத்தில், திமுக மாநில இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டார். திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அமைச்சர் கே.என்.நேரு அணிவித்தார்.

 

“உங்களுக்கு தான் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது, இந்தாங்க கருங்காலி மாலை போடுங்கள்” எனக்கூறிக் கொண்டே ஐ.பெரியசாமியின் கழுத்தில், அமைச்சர் நேரு, கருங்காலி மாலையை அணிவித்தார்.

Right Menu Icon