--- --:--:-- --

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

3

தெற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என்றும், 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், பிரதான சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

 

நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சூளைமேடு, அமைந்தகரை, அரும்பாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம், கொளத்தூர். அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.

 

இதே போல, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழையால் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

 

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, வெங்கடேசபுரம், குன்னம், வேப்பூர், அகரம் சீகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கருமேகங்கள் கனமழையை கொட்டியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Right Menu Icon