பர்தா அணிந்து நகை பார்ப்பது போல் கம்மல் திருட்டு..!
சென்னையில் நகை கடையில் நகை வாங்குவது போல நடித்து கம்மலை திருடிய இளம் பெண் கைது செய்யப்பட்டார். புது வண்ணாரப்பேட்டையில் உள்ள மதன் ஜுவல்லரிக்கு பர்தா அணிந்த ஒரு பெண் வந்து சென்ற பிறகு 10 கிராம் கம்மல் காணாமல் போனது.
இது குறித்த புகாரில் விசாரணை நடத்தி போரூரைச் சேர்ந்த பிரியங்காவை போலீசார் கைது செய்தனர். நர்ஸ் பணியில் குறைவான சம்பளம் கிடைத்ததால் திருட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






