--- --:--:-- --

தீபத் திருவிழா – திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கம்

5

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தாம்பரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்திலிருந்து நாளை மறுநாள் காலை 8.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. மதியம் 12.35க்கு சிறப்பு ரயில் திருவண்ணாமலை சென்றடையும்.

 

மறு மார்க்கமாகவும் நாளையும் நாளை மறுநாளும் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 3.45க்கு சிறப்பு ரயில் புறப்படும். இது மட்டும் இன்றி சென்னை கடற்கரையில் இருந்து நவம்பர் 26, 27ஆம் தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வேலூர் கண்டோன் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

 

திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் வேலூர் வழியாக இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சிறப்பு ரயிலை தீபத் திருவிழாவிற்காக செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon