--- --:--:-- --

திருப்பூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

5ec009a4-90c6-48fb-806e-f21e4ef8d959

திருப்பூர் காவிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு(வயது29), இவா் அண்ணா காலனி திமுக மாணவர்அணி அமைப்புச் செயலாளராக இருந்துள்ளார்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 வயதில் மகன் உள்ளனர்.

 

காலேஜ் ரோட்டில் ஐயப்பன் கோவில் அருகே காவிரி தெருவில் உள்ள கே.வி.பி காம்ப்ளக்ஸ் மேல் மாடியில் பைனான்ஸ் கடை நடத்தி வந்துள்ளார்.

இரவு 8 மணிக்கு கடையை பூட்டி விட்டு கீழே இறங்கி வந்தபோது, அங்கு வந்த கும்பல் பாலுவை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். வெட்டுக்காயங்களுடன் அவர் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.அவரை வெட்டிக்கொன்ற கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

சம்பவம் குறித்து அறிந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட பாலுவின் உடலை பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலையில் 4 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

 

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon