ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார் .
அப்போது ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி குறித்தும், மேம்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி குறைப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக கூறினார்.
BS4 இலிருந்து BS6 க்கு நடைமுறை மாற்றுவதே வாகனத் துறை மந்தநிலை காண காரணம் எனக் கூறிய அமைச்சர், அனைத்து துறைகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். பொருளாதார மந்த நிலைக்கு பிரதமர் மோடி அரசின் தவறான முடிவுகளை காரணம் என கூறியுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் விமர்சனத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.