தனியார் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவர்..!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விஜயின் நாமக்கல்லில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துள்ளார்.
இந்நிலையில் 19ஆம் தேதி அதிகாலை மர்மமான முறையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தக்கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி அளித்ததை ஏற்று பின்னர் மறியல் கைவிடப்பட்டது.






