தமிழக பாஜக தலைவர் பதவி யாருக்கு ? தலைமையை முட்டும் தலைகள்
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? தலைவர் பதவிக்கான போட்டியில் யாரெல்லாம் இருக்காங்க..என்ன என்பதை பாா்ப்போம்.
பாஜக பொருத்தவரைக்கும் தமிழகத்தில் தலைவர் பதவியை 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் வகித்து வந்தார். இவர் கட்சியை வலுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல், அரசியல் களத்திலும் வலுவான கருத்துக்களை முன்வைக்கக் கூடிய ஒரு தலைவராகவே திகழ்ந்து வந்தார்.

தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட காரணம் என்ன என்பது தான் இப்போதைய ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் பாஜகவை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜக தலைமை உறுதியாக இருக்கிறது. உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என்பது அக்கட்சியின் ஒரு திட்டமாக இருக்கிறது. தற்போது தமிழிசையை பொருத்த வரையில் 44 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கட்சியில் சேர்த்துள்ளதாக பெருமையோடு குறிப்பிட்டு வருகிறார்.
ஆனால் பாஜக தலைமை இந்த எண்ணிக்கை போதாது, இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கருதுகிறது. எனவேதான் கட்சியை மேலும் தமிழகத்தில் வலுப்படுத்த வேண்டும். அதன் காரணமாகவே தான் தற்போது தலைவா் பதவியில் இருந்து தமிழிசை விடுவிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சி நிா்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டதை அடுத்து, தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் முதலிடத்தில் உள்ளனர். நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பெயர் நாளை அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




