--- --:--:-- --

மது போதையில் தாயைக் கொன்ற போதை மகன்..!

6

பெற்ற தாயை மதுபோதையில் வெட்டி கொன்ற நபர் ஒருவர் தனது மகனின் கையை வெட்டியதோடு சம்பந்தமே இல்லாத பக்கத்து வீட்டுக்காரரை வெட்டி கொன்றார்.

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி கரையூரை சேர்ந்த தொழிலாளியான ஈஸ்வரனுக்கும் அவரது மனைவிக்கும் நேற்று தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

 

ஏற்கனவே போதையில் இருந்ததாக கூறப்படும் ஈஸ்வரன் மேலும் குடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த தனது தாய் செல்லாவை அரிவாளால் வெட்டி தாக்கியதாக தெரிகிறது.

 

அவரது வலது கையை வெட்டிவிட்டு வீட்டிற்கு வெளியே சென்று தெருவில் கத்தி கொண்டு படுத்திருந்த ஒரு நபரையும் வெட்டியுள்ளார். அதோடு நிறுத்தாமல் அதே தெருவில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகளையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon