விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மத்திய வங்க கடல் பகுதியில் சுழல் காற்று அடிக்க 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.





