தாய் மாமன் கழுத்தை கதற கதற அறுத்த அக்கா மகன்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தாய்மாமன் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம் அம்மன்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் கூலி வேலை செய்து வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் விசாரணையில் செல்வராஜ் அக்கா மகன் ஜோதி வாசு மற்றும் 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.
செல்வராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.





