தேர்தல் பரப்புரையில் அமைச்சர் அளித்த வாக்குறுதி..!
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலில் மத்திய பிரதேச மக்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டப் பேரவை தேர்தலையொட்டி அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக மூத்த தலைவர் பேசினார்.
அப்பொழுது மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலில் மத்திய பிரதேச மாநில மக்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாட்டு மாநிலங்களவை உறுப்பினர் விஜய் சிங் ஆகியோர் தங்களது வாரிசுகளை முதலமைச்சராக்க நினைப்பதாகவும் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க நினைப்பதாகவும் அமைச்சர் விமர்சனம் செய்தார்.






