நாட்டு பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி..!
ராணிப்பேட்டை மாவட்டம் அருகே நாட்டு பட்டாசு வெடித்து நான்கு வயது சிறுமி பலியான சம்பவம் தீபாவளி நாளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாம்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதி ரமேஷ் மற்றும் அஸ்வினி. இவர்களுக்கு நனிஷ்கா என்ற நான்கு வயது பெண் குழந்தையும் ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளது .
இந்த நிலையில் ரமேஷின் அண்ணன் விக்னேஷ் நாட்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பட்டாசு ஆனது சிதறி சிறுமியின் மீது பட்டு வெடித்தது. இதில் சிறுமிக்கும் சிறுமியை காப்பாற்ற முயன்ற விக்னேஷுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து இருவரும் செய்யாறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





