மூன்று நாட்களாக மாயமான நபர்.. பாலத்தின் கீழ் சடலமாக மீட்ட போலீசார்..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மூன்று நாட்களுக்கு முன் மாயமான இளைஞர் பாலத்தின் கீழ் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த கரும்பு குப்பம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார். தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்மாயமானவரை அதே பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் கீழ் போலீசார் சடலமாக மீட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





