உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்து..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டுமான பணியின் பொழுது சுரங்கப்பாதை சரிந்து உள்ளே சிக்கித் தவித்து வரும் நாற்பது பேரை மீட்கும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
உத்தராகாண்ட் மாநிலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் சுரங்கம் சுவர்கள் சரிந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது.
அதில் இடிபாடுகளை அகற்றும் பணியை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே சிக்கிய 2 தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
மீடப் பணிகளை உத்தரகாண்ட் முதலமைச்சர் தானே கண்காணித்து வருகிறார். தேசிய நெடுஞ்சாலை சுமார் நான்கரை கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 35 மீட்டர் நிலத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.






