மகளை கொன்று விடுவதாக கூறி பெண்ணிடம் கத்தி முனையில் திருடிய திருடன்..!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பேனாக் கத்தியை காட்டி மிரட்டி மூன்று சவரன் நகை பறித்து சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கணவரை இழந்த ருக்மணி மகள் மற்றும் இரு மகன்களின் உதவியோடு வீட்டருகே சூப்பர் மார்க்கெட் ஹார்ட்வேர் ஸ்டோர் நகைக்கடை ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
இரவு 7 மணியளவில் ருக்மணி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு வீட்டிற்குள் புகுந்த முகமூடி திருடன் நான் சொல்வதை கேட்காவிட்டால் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள மகளை என் ஆட்கள் கத்தியால் குத்தி கொன்று விடுவார்கள் என மிரட்டி தங்கச் செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.






