கொடைக்கானல் அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. தந்தை, மகன் பலி..!
கொடைக்கானல் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் 100 அடிப்பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் தந்தை மகன் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே ஊராட்சிக்கு உட்பட்ட ஜீவா நகரை சேர்ந்தவர்கள் கமலநாதன், சாமுவேல், யுவான் இவர்கள் மூவரும் சரக்கு வேனில் பெருமாள் மலை சென்று விட்டு மீண்டும் பழனிக்கு திரும்பியுள்ளனர்.
பண குறிஞ்சி பகுதிக்கு சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தவன் சாலையோர தடுப்பையும் தடுத்து ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யுவான் என்பவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தந்தை மகனான கமலநாதன் சாமுவேல் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






