பழுதாகி ஆங்காங்கே நிற்கும் பேருந்துகள்..!
சேலத்தில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மாணவர் பேருந்து கள்ளக்குறிச்சி நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது பேருந்து பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது. அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையிலே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





