--- --:--:-- --

வேதாரண்யம் குளத்தில் ஆறு மாதமாக பொது மக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது..!

7

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறு மாதமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் புது குளத்தில் முதலை இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

 

குளத்தில் முதலை இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர் அந்த பகுதியிலே எச்சரிக்கை பலகை வைத்தனர். பதுங்கி இருந்த முதலையை வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். 100 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon