பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் மீண்டும் வேண்டும் என கூறும் பள்ளி மாணவிகள்..!
சேலத்தில் தங்களது ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை திரும்ப பெறுமாறு அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். சேலம் தேர்வில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெயந்தி என்பவர் மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மீண்டும் அதே ஆசிரியை தங்களுக்கு வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு தலைமை ஆசிரியர் மாணவிகளை பள்ளியிலிருந்து நீக்கி வருவதாக மிரட்டியதாக தெரிகிறது.
இதனையடுத்து நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற மாணவிகள் மாவட்ட முதன்மை கல்வி ஆசிரியரை சந்தித்து இது குறித்து தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மாணவிகளை அனுப்பி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





