இரவு முழுவதும் பெய்த கனமழை.. சாலையில் விழுந்த மரம்..!
நெல்லை மாவட்டத்தில் இரவு பெய்த கன மழையால் குறுக்குத்துறை பகுதியில் மரம் விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரை நேற்று இரவு முதல் கன மழை பெய்து வந்த நிலையில் காரணமாக சாலையில் உள்ள பிரம்மாண்டமான மரமானது முழுமையாக சாய்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையில் உடனடியாக மரத்தை முழுமையாக அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





