அதிமுகவின் கொடி பொருத்தப்படாத காரில் பயணித்த ஓ.பன்னீர்செல்வம்..!
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி பொருத்தப்படாத காரில் பயணம் செய்தார்.
அதிமுகவின் பெயர் கட்சியின் கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் வருகை அளித்தனர்.
பின்னர் அங்கு அதிமுக கொடியில்லாமல் நின்ற தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனிடைய அதிமுக கொடி பெயரை பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்று தமது ஆதரவாளர்களோடு அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





