சாப்பாடு பந்திக்கு காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்த மோதல்..!
ஹைதராபாத்தில் சாப்பாடு பந்தியில் உட்கார இடம் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது மோதலாக மாறியுள்ளது. தெலுங்கானா மாநில சட்டமன்றத்திற்கு இம்மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஹைதராபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு அந்த பகுதியில் உள்ள மண்டபத்தின் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்பொழுது காங்கிரஸ் தொண்டர்கள் இருதரப்பினர் மதிய உணவு சாப்பிடுவதற்காக நாற்காலிகளை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





