மீசோவில் பம்பர் பரிசு.. மெசேஜை நம்பி லட்ச கணக்கில் ஏமாந்த வாடிக்கையாளர்..!
மீசோ ஆப்பில் மகேந்திரா கார் பரிசாக விழுந்துள்ளதாக கூறி விவசாயிடமிருந்து 17,000 ரூபாயை ஏமாற்றியவர்கள் மீது புதுச்சேரி சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விற்பனை தளமான மீசோவில் பயன்படுத்தி பொருட்கள் வாங்கி வந்த ஐயப்பன் என்பவருக்கு பம்பர் பரிசு விழுந்துள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
காரை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் என கூறி 17 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு கார் அனுப்பி வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தான் மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஐயப்பன் அளித்த புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





