சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்..!
சத்தீஸ்கரின் சுப்மா மாவட்டத்தில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்து இருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நக்சலைட்டுகள் அங்கு அதிகமாக இருப்பார்கள் என்பதால் பலத்த பாதுகாப்போடு இந்த வாக்கு பதிவு என்பது நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்றைய தினம் நக்சல் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் இரண்டு காவலர்கள் காயமடைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சத்தீஸ்கரின் மாவட்டத்தில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரரும் காயமடைந்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





