அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி..!
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் போன்ற தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் இந்த தேர்வுகளை எழுத விருப்பம் உள்ள மாணவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தலாமே ஒழிய கட்டாயப்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்தை ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அவற்றை தீர்ப்பதற்கான முறைகளை மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





