பெண்ணிடம் அத்துமீறல்.. கந்துவட்டி கும்பல் அராஜகம்.. கரூரில் அதிர்ச்சி..!
கரூரில் கந்து வட்டி கொடுமை செய்ததாக கூறி ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் தாலியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்கள் இருவரும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள்.
நீலமேகம் சில மாதங்களுக்கு முன்பு 60 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று மாத வட்டியாக 6,000 ஒரு மாதமும், 4,000 ம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நிதி நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணியத்தை ஐந்து பேர் தகாத வார்த்தைகளில் பேசி நீலமேகத்தின் மனைவி ரஞ்சிதாவை துன்புறுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான சட்டப்பிரிவுகள் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நீளமேகம் புகார் அளித்துள்ளார். கரூரில் மீண்டும் கந்துவிட்டு கொடுமை தலைதூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





