டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் அமலாக்கத்துறை சோதனை..!
டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஹவாலா பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
சுங்கத்துறை பதிவு செய்த புகார் அடிப்படையில் அமைச்சர் தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை விவரங்களை அமலாக்கத்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.





