--- --:--:-- --

தீபாவளியை முன்னிட்டு தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்..!

1

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய நான்கு நாட்கள் நாகர்கோவில் – தாம்பரம் இடையே ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

 

நாகர்கோவிலில் மாலை 4:35 மணிக்கு புறப்படும் அந்த ரயில் நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக அதிகாலை 4:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரம் – நாகர்கோவில் இடையே நவம்பர் 6, 13, 20, 27ம் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

 

தாம்பரத்திலிருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் ரயில் அங்கு 8.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ஒன்று, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி 5, படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள் பொதுவாக 2 பெட்டிகள் இருக்கும்.

 

Right Menu Icon