இன்று ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் – வெளியான அறிவிப்பு..!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.
விஜயதசமியன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கம். இதனையடுத்து அரசு உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இதற்காக தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





