--- --:--:-- --

கடன் வேண்டுமா என தொந்தரவு செய்ததால் நபர் செய்த போராட்டம்..!

9

திருச்சியில் கடன் வேண்டுமா என தொந்தரவு செய்த நிறுவனம் ஒன்றின் முன் தொழிலாளி ஒருவர் அரைநிர்வாணத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர் சங்கர் வியாபாரம் செய்து வரும் இவருக்கு தனியார் நிறுவனத்திடம் இருந்து கடன் வேண்டுமா என பலமுறை அழைப்பு வந்துள்ளது.

 

இதனால் ஆத்திரமடைந்த ஷங்கர் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்று அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னிடம் கோமணமும் துண்டும் தான் உள்ளது. தன்னை ஏன் மீண்டும் மீண்டும் அழைத்து கடன் வேண்டுமா என தொந்தரவு செய்கிறீர்கள் என கூறினார். தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon