காசாவில் 500 பேர் உயிரிழப்பு..!
காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல், ஹமாஸ் படையினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர். சுக்குநூறாக இடிந்த கட்டிடம், சிதறி கிடக்கும் உடல்கள். மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிர்பாராமல் நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என இஸ்ரேல் மீது பாலஸ்தீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.
மருத்துவமனையை குறி வைத்து இஸ்ரேலிய விமானப்படை வெடிகுண்டுகளை வீசியதாக ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர். காசாவில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேலிய அரசு எச்சரிக்கை விடுத்ததில் மருத்துவமனை அமைந்துள்ள இந்த பகுதியும் அடங்கும் எனக் கூறியுள்ள ஹமாஸ் படையினர் இஸ்ரேல் அரசுக்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
அதேசமயம் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என இஸ்ரேல் அரசு விளக்கம் அளித்துள்ளது. தங்களது தாக்குதல் இலக்காக மருத்துவமனை இருந்தது இல்லை எனக்கூறி பாதுகாப்புத்துறை அமைச்சகம் அமைப்பு அனுப்பிய ஏவுகணை தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்திருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





