--- --:--:-- --

கிரிப்டோ கரன்சி மோசடி விவகாரம் பாஜக நிர்வாகி கைது..!

2

கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகி சாக்கோட்டை கார்த்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

கும்பகோணத்தில் கிரிப்டோகரன்சியை முதலீடு செய்வதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த புகாரில் அர்ஜுன் கார்த்தி என்பவரையும் அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

இந்த நிலையில் அர்ஜுன் கார்த்தியிடம் நடத்திய விசாரணையில் பாஜக மாநில ஓபிசி அணி செயலாளர் சார் கோட்டை கார்த்திக் என்பவர் தன்னிடம் பல கோடி ரூபாயை பறித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து திருச்சி அருகே முசிறியில் தலைமுறைவாக இருந்த சார்கோட்டை கார்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்துல் கார்த்தியை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

 

Right Menu Icon