பெண்களை ஓசி டிக்கெட் எனக் கூறியதால் வந்த சண்டை..!
சென்னையில் ஓடும் பேருந்தில் நடத்துனரை மிரட்டிய நபரை தட்டி கேட்ட பெண் பயணிகளை ஓசி பயணம் என கூறியதால் பரபரப்பு நிலவியது. திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர் வரை சென்ற பேருந்து ஏரியா ஆண் பயணி ஒருவர் சில்லறை தொடர்பாக மிரட்டி உள்ளார்.
மேலும் நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்ததால் பேருந்தில் இருந்த பெண்கள் அது குறித்து கேட்டுள்ளனர். அப்பொழுது அவர்களை ஓசியில் பயணம் செய்வதாக இழிவுபடுத்தி தகாத முறையில் பேசியுள்ளார்.
அதனால் அந்த பேருந்து காவல் நிலையத்தில் விடப்பட்டது .அங்கு போக்குவரத்து போலீசார் அவரை கண்டித்து அனுப்பினார்.





