மொபைல் போன் பயன்படுத்தினால் பின் விளைவுகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்க உத்தரவு..!
மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவிய பின் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய நிகழ்ச்சிகளை மாவட்டத்தில் இந்த மாதத்திற்குள் நடத்த வேண்டும் எனவும் நவம்பர் 5ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.





