கவுன்சிலர் அலுவலகத்தில் புகுந்து தாக்கிய காவல்துறையினர்..!
சேலத்தில் திமுக கவுன்சிலரின் உதவியாளரை அலுவலகத்தில் புகுந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம் மாநகராட்சி 55 வது வார்டு திமுக கவுன்சிலர் ஆன தனலட்சுமி சதீஷ், கட்சி அலுவலகம் திருஞானம் நகரும் முதல் தெருவில் உள்ளது. அந்த அலுவலகத்தை பார்த்துக் கொள்ளும்படி புகழேந்தி என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை சேலம் மாநகர காவல் துறையினர் வெங்கடேசன், செந்தில் ஆகிய இருவரும் அலுவலகத்திற்கு கொண்டு உதவியாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவரை கீழே தள்ளி கால்களால் உதைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பலத்த காயமடைந்த போது புகழேந்தி வலி தாங்க முடியாமல் அலறி அடித்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய மேலும் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.





