பெட்ரோல் பங்க் ஊழியரை அடித்த ஆட்டோ டிரைவர்..!
கேரளா மாநிலம் கண்ணூரில் பெட்ரோல் பங்க் ஊழியரை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கண்ணூரில் உள்ள பெட்ரோல் வங்கியில் ஆட்டோ ஒன்றுக்கு டீசல் போடப்பட்டுள்ளது.
அப்பொழுது டீசலுக்கு பணம் கொடுக்காமல் ஆட்டோ ஓட்டுனர் தப்ப முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் பங்க் ஊழியர் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





