--- --:--:-- --

பேருந்தில் ஏற வந்த மூதாட்டி.. ஓட்டுநர் செய்த செயலால் பரபரப்பு..!

9

சேலம் வள்ளுவர் சிலை அருகே அம்மாபேட்டை பகுதியில் சேர்ந்த 80 வயது மூதாட்டி மாரியம்மாள் இவர். ஜங்ஷன் செல்லும் அரசு பேருந்தில் ஏற முயன்ற பொழுது மூதாட்டி ஏறுவதை கவனிக்காத பேருந்து ஓட்டுனர் பேருந்து இயக்கியதால் 10 மீட்டருக்கு மேலாக மூதாட்டி தரதரவென இழுத்து செல்லப்பட்டிருக்கிறார்.

 

இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் கூச்சலிடமே பேருந்தின் ஓட்டுனர் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஓட்டுனரையும் நடத்துனரையும் எச்சரித்து பேருந்து அனுப்பி வைத்தனர்.

 

மேலும் காலையில் லேசான காயம் அடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 வயது மூதாட்டியை 10 மீட்டருக்கு மேலாக தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon