--- --:--:-- --

லுலு மாலில் இந்தியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரிதாக வைக்கப்பட்டதா?

12

கேரளாவில் உள்ள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் தேசியக் கொடி பெரிதாக வைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களும், செய்திகளும் பரவி வந்த நிலையில், இதுதொடர்பாக லுலு மாலே முன்வந்து விளக்கம் அளித்துள்ளது.

லுலு நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கிரிக்கெட் உலகக் கோப்பை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொச்சியில் உள்ள லுலு மாலில் இப்போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள் செங்குத்தாக கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொடியும் வெவ்வேறு உயரங்களில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன.

இதனை பார்க்கும் போது, மேலே கட்டப்பட்டுள்ள கொடிகள் பெரிதாகவும், கீழே கட்டப்பட்டுள்ள கொடிகள் சற்று சிறியதாகவும் தெரிவது இயற்கையே. இது ஒரு தோற்றப் பிழை. மற்றபடி, எந்த தேசியக் கொடியும் ஒன்றை விட ஒன்று பெரிதாகவோ, சிறியதாகவோ வடிவமைக்கப்படவில்லை.

அதேபோல, இந்தக் கொடிகளில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. ஆனால், லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் தேசியக் கொடி பெரிதாக அமைத்துள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

இது ஒரு அடிப்படையற்ற மற்றும் ஆதாரமற்ற பதிவு என்பதை நாங்கள் தெளிவுப்படுத்திக் கொள்கிறோம். இந்தக் கொடிகளை கீழே இருந்து மேலாக புகைப்படம் எடுத்தால் அனைத்து கொடிகளும் சம அளவில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுபோன்ற தவறான செய்திகளுக்கு எதிர்வினையாற்றுவதும், உண்மையை வெளிக்கொணர்வதும் மிகவும் அவசியமான ஒன்று என்பதால் இதனை நாங்கள் தெரிவிக்கிறோம். இதுபோன்ற தவறான பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என லுலு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon