லாரி பட்டறை உரிமையாளர் கொலை..!
சேலத்தில் லாரி பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் தொழிலாளியை கைது செய்த போலீசார் கொலைக்காண காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.
லாரி பட்டறை உரிமையாளரான இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் லாரி பாடி கட்டும் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருங்கல்காடு பகுதியில் ரமேஷ் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கொலை நடந்த இரவு சசிகுமார் என்பவர் பட்டறையில் வேலை செய்துவிட்டு நள்ளிரவு விடு திரும்பியது தெரியவந்தது. இதனால் சசிகுமார் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரது செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து ஈரோடு சென்ற தனப்படை போலிசார் அங்கு பதுங்கி இருந்த சசிகுமாரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.





