--- --:--:-- --

வனிதாவையே மிஞ்சும் மகள் ஜோவிகா..!

11

பிக் பாஸ் வீட்டில் இதற்கு முன்பு பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தற்போது பிக் பாஸ் 7ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார். தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்பில் ட்ராப் அவுட் ஆகிவிட்டேன் என ஜோவிகா சில தினங்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

 

“எப்படியாவது கஷ்டப்பட்டு 12ம் வகுப்பையாவது பாஸ் பண்ணிடு..” என அப்போது விசித்ரா அட்வைஸ் கூறி இருந்தார். இதை வைத்து தற்போது ஒரு பெரிய சண்டையே வீட்டில் வெடித்து இருக்கிறது.

 

விசித்ரா தனக்கு அட்வைஸ் செய்ததை வைத்து ஜோவிகா அவருடன் சண்டை போட்டிருக்கிறார். ‘உங்க அம்மா சொன்னா கேட்டுக்க மாட்டியா’ என விசித்ரா சொல்ல, ‘ ஷோவுக்கு வந்தது நான் தான், என் அம்மாவோ, தாத்தாவோ இல்லை.. என்னை பத்தி மட்டும் நீ பேசு.. என் background பத்தி நீ பேசாத’ என கத்தி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon