--- --:--:-- --

அரசு பள்ளி கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவி தொகை உயர்வு : முதலமைச்சர்

5

அரசு பள்ளி கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவி தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவி தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவி தொகை 1,100 லிருந்து 1600 ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் நடத்தப்படுகின்றன.

 

இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் மாதம் தோறும் உணவு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுதி காப்பாளர்கள் மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை இந்த தொகையை வைத்து தான் வாங்கி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon