அக்டோபர் 11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : பண்ருட்டி ராமச்சந்திரன்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெறும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறினார்.
பாஜக உடன் தொடர்பில் இருப்பதாகவும் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் ஒ.பன்னீர்செல்வம் முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார். மேலும் வருகிற 11-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





