--- --:--:-- --

குடும்ப தகராறில் 6 பேர் பலி..!

10

த்திரபிரதேச மாநிலத்தில் நில தகராறு ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதேபூர் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே இரு பிரச்சனை தொடர்பாக விரோதம் ஏற்பட்டது.

 

இன்று இருதரப்பிற்கும் இடையே நீண்ட தகராறு ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு செங்கற்களாலும் கூர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் மறுபுறம் ஒருவர் உயிரிழந்து உள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon